![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
நீங்கள் சமீப காலத்தில் வெளி நாட்டிற்கு குடிபெயர்ந்திருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஜூலை முதல் செப்டம்பர் 2018 வரை நீங்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையை கண்டிருப்பீர்கள். தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சியால், குரு பகவான் உங்கள் ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு வருவதால் அத்தகைய நல்ல பலன்கள் குறையக் கூடும்.
உங்கள் பயணத்தில் அதிக சிரமங்கள் மற்றும் தடைகள் ஏற்படும். மேலும் நீங்கள் திருட்டில் இருந்து உங்கள் வாகனம், வீடு மற்ற விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்க தக்க காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. குறிப்பாக நீங்கள் உங்கள் தொழில் அல்லது சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வேளையில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் தங்க நகைகளை வங்கி பெட்டகத்தில் வைப்பது நல்லது. உங்கள் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தராது. மேலும் கடைசி நிமிடத்தில் பதிவு செய்வது அல்லது ரத்து செய்வது போன்ற விசயங்களால் அதிக செலவுகள் ஏற்படக் கூடும்.
இந்த காலகட்டத்தில் குடியேற்றம் குறித்த எந்த பலனையும் எதிர் பார்ப்பது நல்லதல்ல. உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் வேலை அனுமதிக்கான பெடிசனை புதுபிக்க நினைத்தால் அது சரியான ஆவணங்கள் இல்லாமல் நிலுவையில் இருக்க கூடும். மேலும் உங்களிடம் இருந்து அந்த நிறுவனம் சில தகவல்களை மறைக்க கூடும். அதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் வெளி நாட்டு பயணத்தை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic