குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


குரு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்தது உங்களுக்கு உத்தியோகத்தில் சுமூகமான வழியில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தி இருந்திருக்கும். மேலும் உங்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்திருக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். தற்போது நிகழும் குரு பெயர்ச்சியால் உங்களுக்கு ஒரு கடுமையான சூழல் நிலவக் கூடும்.
உங்கள் அலுவலகத்தில் அதிகம் சவால்கள் நிறைந்த சூழல் ஏற்படக் கூடும். தேவையற்ற மாற்றங்கள் ஏற்படக் கூடும். உங்கள் ப்ரோஜெக்ட்டில் மாற்றம் அல்லது புது மேலாளர் அல்லது புதிதாக நியமிக்க பட்ட உடன் வேலை பார்ப்பவர்கள் போன்ற மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அலுவலகத்தில் சரியான உதவி கிடைக்காமல் போகலாம். மேலும் மறைமுக எதிரிகள் அதிகரிக்க கூடும்.


நீங்கள் நாள் முழுக்க வேலை பார்த்தாலும் உங்களது கொடுக்கப் பட்ட பணியை சரியான நரத்திர்க்குள் முடிக்க முடியாமல் போகலாம். மேலும் வேலையை முடிக்காததால் உங்கள் மீது புகார்கள் எழக் கூடும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு மற்றவருக்கு கிடைக்கக் கூடும். உங்கள் முதலாளி உங்கள் வேலையை பார்த்து மகிழ்ச்சி அடைய மாட்டார். எனினும் ஏப்ரல் 2019 வாக்கில் நீங்கள் சில நல்ல மாற்றங்களை எதிர் பார்க்கலாம்.
உங்கள் தவறு ஏதும் இல்லை என்றாலும் சரியாக வேலை பார்க்கவில்லை என்று உங்களுக்கு எச்சரிக்க நோட்டீஸ் தரக் கூடும். இது நீங்கள் அலுவலகத்தில் பிறர் முன் அவமானப் படும் சூழலை ஏற்படுத்தக் கூடும். எந்த ஒரு அவசர் முடிவும் உங்கள் வாழ்க்கையை பெரிதும் பாதிக்க கூடும். நீங்கள் பொறுமையாக இல்லை என்றால் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். உங்களால் உங்கள் சொந்த வாழ்க்கையையும் அலுவலகப் பணிகளையும் சமாளிக்க முடியாமல் போகலாம். அரசு வேளையில் இருப்பவர்கள் அதிக பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடலாம்.



Prev Topic

Next Topic