குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

தொழில் அதிபர்கள்


முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் இல்லாததால் தொழிலதிபர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்திருந்திருப்பார்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் வரும் அக்டோபர் 11, 2018 முதல் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தருவார். நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைக்கலாம். பண வரத்து அதிகரிக்கும். மேலும் தேவைக்கு கடன் வாங்க உங்களுக்கு நல்ல வழிகள் கிடைக்கும்.
நீங்கள் பல நல்ல யோசனைகளை செயல் படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஏப்ரல் 2019 வாக்கில் நேர்மறை பலங்கள காணலாம், உங்களுக்கு வங்கியில் இருந்து போதுமான நிதி உதவி கிடைக்கும். புது முதலீட்டாளர்கள் ஏப்ரல் 2019 முதல் உங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு உதவி செய்வார்கள். எனினும் நீங்கள் உங்கள் தொழிலை விரிவு படுத்த எண்ணினால் உங்கள் பிறந்த சாதக பலன் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் சனி பகவான் மற்றும் கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும்.



நீங்கள் புதிதாக தொழில் தொடங்க முயற்ச்சித்தால், அதனை மார்ச் 2019க்கு மேல் முயற்ச்சிப்பது நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் கலவையான பலன்களை பெறுவார்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் உங்களுக்கு கிடைக்கும்.




Prev Topic

Next Topic