குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஆனால் குடுமபத்தில் பிரச்சனைகள் (55 / 100)


குரு பகவான் உங்கள் ராசியின் நான்காம் வீட்டிற்கு பெயருவதால் நல்ல நிவாரணத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். எனினும் சனி பகவான் உங்களுக்கு சில கசப்பான அனுபவங்களையும் குழப்பமான மன நிலையையும் ஏற்படுத்த கூடும். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனினும் உங்கள் மன அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் குடுமபத்திலும் உறவுகளுக்கு மத்தியிலும் எந்த ஒரு நல்ல முன்னேற்றத்தையும் நீங்கள் காண முடியாமல் இருக்க கூடும். எனினும் புதிதாக எந்த பிரச்சனைகளும் இருக்காது. நீங்கள் புதிதாக ஏதேனும் உறவை அமைத்து எண்ணினாலோ அல்லது திருமணம் செய்ய எண்ணினாலோ உங்கள் ஜாதக பலனை பார்த்து பின் முயற்ச்சிப்பது நல்லது. முடிந்த வரை காதல் விசயங்களை தவ்ரிப்பது நல்லது. மேலும் நண்பர்களுடன் அதிகம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்பாது உங்கள் மன பிரச்சனைகளை குறைக்க உதவும்.
உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்காக முயற்ச்சித்தால் அதற்கான முயற்ச்சிகளை செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள அரசியல் குறையும். எனினும் முக்கிய பிரச்சனையை ஏதேனும் இருந்தால் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடும். அது குறிப்பாக உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுவதாகும். உங்கள் முதலாளி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் வேலை சுமையை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். மேலும் உங்கள் சொந்த பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள்.


உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடனை நீங்கள் விரைவில் அடைப்பீர்கள். மேலும் வங்கி கடனை நிதி மறுபரிசீலனை செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் நிலம் வாங்க எண்ணினாலோ அல்லது ஏதேனும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் வாங்க எண்ணினாலோ அதன் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்து பின் முயற்ச்சிப்பது நல்லது. நீங்கள் ஏமாற்ற படுவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது. பங்கு சந்தை உங்களுக்கு சாதகமாக இருக்காது. அதனால் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் நிதி குறித்த எந்த முடிவும் எடுப்பது நல்லது.


Prev Topic

Next Topic