![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 17, 2019 முதல் நவம்பர் வரை 04, 2019 உளவியல் பிரச்சனைகள் (25 / 100)
எதிர்பாரா விதமாக குரு பெயர்ச்சியின் இந்த காலகட்டம் உங்களுக்கு மோசமானதாக இருக்க கூடும். குரு பகவான் உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் சஞ்சரித்தாலும் உங்களை சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்படக் கூடும் பாதிப்புகளில் இருந்து உங்களை காக்க முடியாது. சனி பகவான் உச்சம் பெறுவதால் ராகு உங்களுக்கு உதவ முடியாது. உங்கள் மன பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் மன வலிகள் அதிகரிக்க கூடும். எனினும் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் உங்கள் மன வலிகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் அது உங்கள் வாழ்க்கையை அதிகம் பாதிக்க கூடும்.
உங்கள் வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள், குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவினர்களுடன் நீங்கள் அதிகம் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களுடன் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது சந்தேகமே. தற்காலிகமாக நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிய வேண்டிய சூழல் ஏற்படக் கூடும். காதலர்கள் பிரியக் கூடும். நீங்கள் உங்கள் காதலை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதக பலனும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். நீங்கள் யாரையேனும் இந்த காலகட்டத்தில் விரும்பி அவரிடம் உங்கள் விருப்பத்த்டை சொல்ல முயற்ச்சித்தால் நீங்கள் அவர்களால் காயப் படுத்த படுவீர்கள் அல்லது நிராகரிக்க படுவீர்கள். இதனால் உங்கள் மன வேதனை அதிகரிக்க கூடும். திருமனத்திர்க்கான முயற்ச்சிகளை செய்ய இது ஏற்ற காலகட்டம் இல்லை.
உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். எனினும் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலைக்கு நீங்கள் இந்த காலகட்டத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் உங்கள் சொந்த பிரச்சனைகளால் அதிகம் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். பெண்கள் மற்றும் மேலாளர் போன்றவர்களால் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் நற் பெயரை இழக்க கூடும். மேலும் உங்கள் உத்தியோகத்தை நீங்கள் விட்டு விட எண்ணுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நவம்பர் 2019க்கு பின் உங்களுக்கு குரு பகவான் பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருந்து பெயரும் பொது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic