![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | ஆரோக்கியம் |
ஆரோக்கியம்
கடந்த ஒரு வருடம் நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது தற்போது அத்தகைய பாதிப்புகளை குறைக்க உதவும். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனினும் உங்கள் மனதில் சில வலிகள் இருக்கத்தான் செய்யும். இது மன அழுத்தத்தையும் வருத்தத்தையும் மார்ச் 2019 வரை ஏற்படுத்தக் கூடும். ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை உங்களுக்கு சற்று ஆறுதலான சூழ்நிலை ஏற்படலாம். எனினும் மறுபடியும் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை நீங்கள் இந்த சூழலை எதிர் கொள்ள நேரிடும். நீங்கள் ஏப்ரல் 2019 முதல் உங்கள் சக்திகளை அதிகம் சேமித்து ஆகஸ்ட் 2019 முதல் உங்களுக்கு ஏற்படவிருக்கும் சவால்களை சந்திக்க பயன் படுத்திக் கொள்ளலாம். இது எதிர்பாராத சில பிரச்சனைகளை நீங்கள் ஆகஸ்ட் 2019 முதல் கையாள உதவும்.
குரு பகவான் மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். இதனால் உங்களுக்கு ஏற்ற மருத்துவம் கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்கள் உங்கள் உடல் மருந்துகளுக்கு ஒத்துழைத்து உடம்பில் உள்ள கொழுப்பு சத்து, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைய, சராசரி நிலைக்கு வர உதவும். நீங்கள் சிறு சிறு உடற் பயிற்சி மற்றும் த்யானம் செய்வதால் மேலும் பலன்கள் அதிகரிக்கும். நீங்கள் விளையாட்டில் இருந்தால் சிறப்பாக செயல் படுவீர்கள். எனினும் உங்களுக்கு தேச அளவில் வெற்றி பெற்று அடுத்தக் கட்ட விளையாட்டில் பங்கு பெற மேலும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது உடல் நலத்தை அதிகரிக்க உதவும்.
Prev Topic
Next Topic