![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
உங்கள் காதல் விசயங்களில் நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்து இருந்திருக்கலாம். அத்தகைய சூழல் உங்கள் மனதை பெரிதும் பாதிக்க கூடும். மேலும் வழிகளை ஏற்படுத்தி இருந்திருக்க கூடும். குரு பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எனினும் சனி பகவான் மற்றும் கேது இணைத்து சில பிரச்சனைகளை உங்கள் காதல் விசயங்களில் ஏற்படுத்தக் கூடும். அதனால் தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பெரிதாக உங்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் சந்தேகமே.
¬காதல் விசயங்களை விட்டு நீங்கள் சற்று விலகி இருப்பது நல்லது. மேலும் நீங்கள் யாரையேனும் விரும்புகிறீர்கள் என்றால் தற்போது உங்கள் காதல் விருப்பத்தை கூறாமல் இருப்பது நல்லது. அவ்வாறு நீங்கள் செய்ய முயர்ச்சித்தாள் நீங்கள் பிறர் முன் ஒன்றும் இல்லாத காரணங்களுக்காக அவமானப் படும் சூழல் ஏற்படலாம். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் உங்களுக்கு எதிராக ஏளனமான காரியங்களை செய்யக் கூடும். இது உங்களுக்கு மனதில் வலியை ஏற்படுத்தக் கூடும். எனினும் மார்ச் 2019ல் ராகு பெயர்ச்சி ஏற்படும் காலத்தில் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
நீங்கள் குழந்தை பேருக்காக காத்திருந்தால் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து அதன் பின் எந்த முயர்ச்சியும் எடுப்பது நல்லது. மருத்துவ சிகிச்சை நீங்கள் எதிர் பார்க்கும் பலனை இந்த காலகட்டத்தில் தராது. எனினும் இத்தகைய சங்கடங்கள் ஏற்படுத்தும் சூழலில் இருந்து உங்களுக்கு தற்காலிகமாக ஒரு சில மாதங்களுக்கு ஏப்ரல் 2019 முதல் கிடைக்கும்.
Prev Topic
Next Topic