குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை சிறப்பான நேரம் (75 / 100)


உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குரு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு ஒரு குறுகிய காலகட்டத்திற்கு இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உடல் நல பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு தக்க மருத்துவம் கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். சமீப கடந்த காலத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் விரைவாக குணமடைய வாய்ப்பு உள்ளது. மேலும் உங்களுக்கு கடுமையான நோய் அல்லது மனம் சம்பந்தமான பிரச்சனையை இருந்திருந்தால் அது தற்போது சரியாகி விடும். சாதாரண மருந்து உங்களை குணப் படுத்தும். உங்களுக்கு நல்ல ஆலோசகர் கிடைத்து நீங்கள் நல்ல வழியில் முன்னேறுவீர்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையிலும் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்திருந்தால் தற்போது அவர்களுடன் சேர ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனினும் சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் புது உறவுகளை ஏற்படுத்தி கொள்வதை தவிர்ப்பது நல்லது. என்னென்றால் அந்த உறவால் உங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவி / கணவன் வீட்டார்கள் உங்கள் கருத்துகளை புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும்.


ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இந்தாள் உங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் வேலை சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். மேலும் அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டமாக இருக்கும். உங்கள் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் புதிதாக பல சிந்தனைகள் மற்றும் திட்டங்களை செயல் படுத்துவீர்கள். பண வரத்து சீராக இருக்கும். உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். நீங்கள் புது வீடு வாங்க அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய முயர்ச்சிப்பீர்கள். எனினும் ஊக வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு நல்ல பலனை தராது.


Prev Topic

Next Topic