![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு பகவான் மீண்டும் உங்கள் ராசியின் நான்காம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் வக்கிர கதி அடைகிறார். ராகு தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். எனினும் இந்த காலகட்டம் சற்று மதமாகவே இருக்கும். எந்த குறிப்பிட தக்க வளர்ச்சியும் ஏற்படாது. நீங்கள் எது செய்தாலும் அது சற்று தேக்கம் அடையும். உங்களால் தெளிவு இல்லாததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் போகலாம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் அதிகம் பாதிக்க படலாம். குறிப்பாக அது உங்கள் அலுவலகம் மற்றும் சொந்த விசயங்களால் ஏற்படுவதாக இருக்கும். உங்கள் மனைவி / கணவனுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தினர்கள் நீங்கள் அவர்களுடன் அதிகம் நேரம் செலவிட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். எனினும் உங்கள் அலுவலக பனி சுமையாலும் அதிகரிக்கும் பதற்றத்தாலும் உங்களால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். காதல் விசயங்கள் குறித்தவரை சிறப்பான பலன்களை நீங்கள் எதிர் பார்க்க முடியாது. நீண்ட தூர பயணம் செய்ய இது ஏற்ற காலகட்டம் இல்லை. என்னென்றால் நீங்கள் அதிகம் தனிமையை உணரக் கூடும்.
வேலை சுமை அதிகரிக்க கூடும். நீங்கள் உங்கள் வேலை சுமையை சமாளிக்க முடியாமல் போகலாம். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பணிகளை முடிக்க முடிக்க போராடுவேர்கள். உங்கள் மேலாளரும் முதலாளியும் உங்கள் கடினமான உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இந்த காலகட்டத்தில் புது வேலைக்கு முயற்ச்சிப்பது அல்லது பனி மாற்றம் செய்ய எண்ணுவது நல்ல யோசனை அல்ல. தொழிலதிபர்கள் தங்களது ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க புது வேலை ஆட்களை பணிக்கு எடுப்பார்கள். பண வரத்து சுமாராக இருக்கும். எனினும் உங்கள் நிதி தேவைகளை நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள்.
அதிகம் பணம் சேமிக்க உங்கள் செலவுகளை கட்டுப்பாட்டிருக்குள் வைத்து கொள்வது அவசியம். உங்கள் சேமிப்பு சரியான திட்டம் இல்லாததால் விரைவாக கரையும். நீண்ட காலம் வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் சிந்தித்து பின் முதலீடு செய்வது நட்டத்தை தவிர்க்க உதவும். ரியல் எஸ்டேட் முதலீட்டில் இருந்து விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic