![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
சனி பகவான் உங்களுக்கு சாதகமான நிலையில் இருந்தாலும் ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும் குரு 1ஆம் வீட்டிலும் சஞ்சரித்ததால் கடந்த ஒரு வருடம் நீங்கள் கலவையான பலன்களை உங்கள் குடும்பத்தில் கண்டிருப்பீர்கள். குரு பகவான் தற்போது உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை சரி செய்வார். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் உங்களுக்கு விவாகரத்து போன்ற விசயங்கள் ஏற்பட்டிருந்தால் தற்போது அதில் இருந்து மாற்று கருத்து ஏற்பட்டு புதிய உறவை அமைத்து கொள்ள எண்ணுவீர்கள்.
உங்கள் தூர சொந்தங்கள் உங்களுக்கு மதிப்பு தருவார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். அவர்கள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமை படுத்தும். உங்கள் மகன் அல்லது மகள் திருமனத்திர்க்கான வரனை நீங்கள் தேட இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் மகிழ்ச்சியாக திருமணம், புது மனை புகுதல் போன்ற சுப காரியங்கள் நிகழ்த்தலாம். குறிப்பாக ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic