குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை சிறப்பான பலன்கள் (85 / 100)


கடந்த ஒரு வருடமாக சனி பகவான் உங்கள் ராசியில் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றார். தற்போது குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். குரு மற்றும் சனி பகவான் இருவரும் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். இதனால் இந்த முதல் பாக காலகட்டத்தில் நீங்கள் சிறப்பான பலன்களை காண்பீர்கள். உங்கள் உடல் நலம் ஜென்ம குருவால் சமீப காலத்தில் பாதிக்க பட்டிருக்கும். ஆனால் தற்போது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நீண்ட மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும் சோர்வடைய மாட்டீர்கள்.
குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தீர்ந்து விடும். உங்கள் வாழ்க்கை துணைவர், உடன் பிறந்தவர்கள் மற்றும் பிற உறவினர்களுடன் நீங்கள் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவது உங்களுக்கு மகிழ்ச்சி தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு தக்க வரன் பார்த்து திருமணம் செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். காதலர்களுக்கு இது ஒரு பொற்காலம். திருமணம் ஆன தம்பதியினர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீண்ட காலமாக காத்திருந்து உங்கள் வாழ்நாள் கனவுகள் தற்போது நிறைவேறும். உங்களுக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது தற்போது நீங்கள் எண்ணிய படியே வெற்றி பெரும். வழக்கால் அல்லது காப்பீட்டு போன்ற வற்றால் உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.


உங்கள் உத்தியோகம் பொறுத்த விசயங்களில் இது ஒரு பொற்காலமாகவே உங்களுக்கு இருக்கும். நீங்கள் அடுத்த நிலைக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்களுக்கு எதிராக எந்த ஒரு சதிகளும் நடக்காது. தொழிலதிபர்கள் நல்ல லாபம் காண்பார்கள். புது ப்ராஜெக்ட் கிடைக்கும் வாய்ப்புகளும் உங்களுக்கு அதிகம் உள்ளது. உங்களுக்கு தற்போது இருக்கும் ஏதேனும் ஒரு நிறுவனத்தை வாங்கி சிறப்பாக நடத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளி வருவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட்டத்தை சோதித்து பார்க்க இது ஏற்ற காலகட்டமாகும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் செய்பவர்கள் விண்ணை தோடும் ஆள்விர்க்கு லாபம் காண்பார்கள்.



Prev Topic

Next Topic