குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை பொற்காலம் (95 / 100)


குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு ராஜ யோகத்தை இந்த காலகட்டத்தில் தரும். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு தாமதமும் ஏற்படாது. மாறாக நீங்கள் அதிவேக வளர்ச்சி கண்டு மற்றும் உங்கள் நிதி நிலையிலும் உத்தியோகத்திலும் ஏற்படும் வளர்ச்சி கண்டு அதிகம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சௌகரியங்களை பெறுவீர்கள். உங்கள் மனைவி/ கணவன் மற்றும் அவரது வீட்டாருடன் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்/ குழந்தை பிரப்பத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்யும்.
திருமனத்திர்க்கான முயற்ச்சிகள் எடுத்து திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுவீர்கள். காதலர்கள் நல்ல சூழல் பெற்று மகிழ்ச்சியோடு இருப்பார்கள். மேலும் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியோடு நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தினர்களுடன் உல்லாச பயணம் செய்வீர்கள். உங்கள் குழந்தைகள் நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமை படுத்தும்.


உங்கள் உத்தியோகத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்று சம்பள உயர்வும் பெறுவீர்கள். மேலும் உங்கள் மேல் அதிகாரிகளுடன் நெருக்கம் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் விண்ணை தொடும் அளவிற்கு வெற்றி மற்றும் வளர்ச்சி காண்பார்கள். உங்களுக்கு நல்ல லாபம் மற்றும் மன வரத்து கிடைக்கும் வகையில் நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் சொத்துக்கள் ஏதேனும் விற்க முயற்ச்சித்தால் அதற்க்கு இது ஏற்ற காலகட்டம்.
உங்கள் நிதி நிலை உங்களை மகிழ்விக்கும். உங்களுக்கு போதுமான பண வரத்து இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். உங்கள் வங்கி கடன் எந்த ஒரு சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். இந்த காலகட்டத்தை பயன் படுத்தி கொண்டு நீங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிடலாம்.



Prev Topic

Next Topic