![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
உங்கள் ராசிக்கு ஏழரை சனி காலம் கடந்த அக்டோபர் 2017 முடிந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் நீங்கள் கண்டிருக்க முடியாது. மாறாக மே 2018 முதல் உங்கள் வாழ்க்கை இன்னும் மோசமாகத் தான் இருந்திருக்கும். இது குறிப்பாக குரு, ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் நிகழ்ந்தது.
தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார், இந்த பெயர்ச்சி நீங்கள் உங்கள் சோதனை காலத்தை கடந்து விட்டதை குறிக்கும். நீங்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பான பல பலன்களை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்கள் எளிதில் சரி செய்வீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்களுக்கு மத்தியில் ஏதேனும் சட்ட பிரச்சனைகள் இருந்திருந்தால் அது தற்போத நல்ல தீர்வு காணும்.
உங்கள் வாழ்க்கையில் நல்ல வெற்றியையும் உத்தியோகத்தில் வளர்ச்சியையும் காண்பீர்கள். புது தொழில் தொடங்க இது ஏற்ற காலகட்டமாக இருக்கும். உங்கள நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளி வருவீர்கள். ரியல் எஸ்டேட் முதலீடு மற்றும் பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் வரும் மார்ச் 2019ல் சஞ்சரிப்பதால் உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் மேலும் பெருகும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் ஒரு கொட்டீஸ்வரராகும் வாய்ப்பும் முக்கியச்த்தவராகும் வாய்ப்பும் ஏற்படும்.
Prev Topic
Next Topic