குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

மார்ச்27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 நிதி நிலையில் கவனம் தேவை(45 / 100)


கேது பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியில் சஞ்சரிப்பது உங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களை ஏற்படுத்தி தரும். எனினும் குரு பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு அதி சரம் நிலைக்கு இடம் மாறுகிறார். அதனால் சில எதிர் பாராத பின்னடைவுகள் உங்கள் நிதி நிலையில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல் நலம் தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கும். உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எனினும் நீங்கள் சனி பகவானின் பலத்தால் சுப காரியங்கள் நிகழ்த்தலாம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் வேலை சுமை மற்றும் பதற்றம் அதிகமாக இருக்கும். தற்போது உங்களுக்கு கிடைத்திருக்கும் பதவி உயர்வை காப்பாற்றி கொள்ள நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. எனினும் இது உங்கள் சொந்த மற்றும் அலுவலக பணிகளை சமாளிப்பதில் சவால்களை ஏற்படுத்த கூடும். எனினும் உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு நிதி நிலையில் சில பலன்களை ஏற்படுத்த கூடும். அலுவலகத்தில் அரசியல் இருந்தாலும் அதனை நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் உங்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சனி பகவான் மற்றும் கேது இணைந்து நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிறர் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு பொறாமை அடைவார்கள்.


உங்கள் நிதி நிலையிலும் முதலீடு செய்வதிலும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். பண இழப்பு குறுகிய காலத்திற்கு உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் ஏமாற்றம் அடையவும் வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ இது ஏற்ற காலகட்டம் இல்லை. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கி கடன் வாங்க சூரிட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீட்டை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.


Prev Topic

Next Topic