![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை தாமதம் / தேக்க நிலை (50 / 100)
குரு வக்கிர கதி அடைந்து உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பின்னோக்கி நகருவார். அதே சமயம் சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இந்த கிரக கிளை உங்கள் வளர்ச்சியில் சில தாமதத்தை ஏற்படுத்த கூடும். உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். எனினும் நீங்கள் யோகா, மூச்சு பயற்சி, த்யானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்வது உங்கள் மனோ பலத்தை அதிகரித்து தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து உங்களை காக்கும்.
திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆன பெண்கள் தற்போது கருவுற்றிருந்தாள் உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களின் துணையோடு இருப்பது நல்லது. காதலர்களுக்கு தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் அது குறைந்த காலகட்டத்திற்கே. உங்கள் சொந்த விசயங்களை நெருங்கிய உறவினராக அல்லது நண்பராக இருந்தாலும் பகிவதை தவிர்ப்பது நல்லது. சுப காரியம் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டம் இல்லை.
அலுவலகத்தில் உங்கள் வேலை சுமை விரைவாக ப்ரோஜெக்ட்டை முடிக்க வேண்டும் என்பதற்காக அதிகரிக்கும். உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை படுவார்கள். நீங்கள் அதிக நேரம் செலவிட்டு வேலை பார்த்து அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிக்க வேண்டும். நீங்கள் வார இறுதியிலும் மேலும் தினமும் அதிக நேரமும் வேலை செய்தால் மட்டுமே உங்கள் அலுவலக பணியை சமாளிக்க முடியும். எனினும் தற்போது நீங்கள் செய்யும் இந்த கடின வேலைக்கும் உழைப்பிற்கும் ஏற்ற சன்மானம் உங்களுக்கு கிடைக்கும். தொழிலதிபர்கள் போட்டியாளர்களால் அதிகம் அழுத்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். நீங்கள் உங்கள் வேலை சுமையை சமாளிக்க கடினமாக வேலை பார்க்க வேண்டும். எனினும் இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
விச ஸ்டாம்பிங் போன்றவை செய்ய நீங்கள் முயற்ச்சித்தால் அதனை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. பண வரத்து சீராக இருக்கும். எனினும் அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் சேமிப்பு குறையும். உங்கள் முதலீட்டில் சில நட்டம் ஏற்படக் கூடும். ஊக வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. நீண்ட காலம் முதலீடு செய்பவர்கள் தற்போது சற்று கவனித்து பின் செயல் படுவது நல்லது.
Prev Topic
Next Topic