![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
ஜென்ம குருவால் ஜூலை 2018 முதல் நீங்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். மேலும் நீண்ட காலமாக ஒரே பதவியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் நீங்கள் பணி புரிந்திருப்பீர்கள். எனினும் தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் ஒரே இரவில் எதிர் பார்த்த பலன்களை பெறுவீர்கள். மேலும் உங்களது தற்காலிக பனி இந்த நவம்பர் அல்லது டிசம்பர் 2018 மாதங்களில் நிரந்தரமாக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக் கூடிய ப்ராஜெக்ட் கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். மேலும் அடுத்த இடத்திற்கு உங்களுக்கு பதவி உயர்வோடு சம்பள உயர்வும் கிடைக்கும். இதனால் உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளர் உங்களை பாராட்டுவார்கள்.
நீங்கள் புது வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் அதற்க்கான தக்க சமயம் இது. நீங்கள் நேர்காணலில் சிறப்பாக செயல் படுவீர்கள். மேலும் பெரிய நிறுவனங்களில் இருந்து உங்களுக்கு வாய்ப்புகள் வரும். வரும் கேது பெயர்ச்சியில் கேது பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகப் படுத்துவார். உங்களது கடினமான உழைப்பிற்கு உங்களுக்க நல்ல சன்மானமும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிக்கவும் இது ஏற்ற காலகட்டமாகும். உங்களுக்கு எதிர் பார்த்த இட மாற்றமும் மற்றும் வெளி நாட்டிற்கு குடிபெயருவதர்க்கான சாதகமான சூழலும் ஏற்படும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic