குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

தொழில் அதிபர்கள்


கடந்த ஒரு வருடமாக தொழிலதிபர்களுக்கு மோசமான காலகட்டமாக இருந்திருக்கும். குரு 8ஆம் வீட்டிலும் சனி பகவான் 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து தோல்விகளையும் ஏமாற்றங்களையும் தந்திருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களுக்கு வங்கி திவால் ஆகும் நிலையம் ஏற்பட்டிருந்திருக்கும். மறைமுக எதிரிகளால் நீங்கள் அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு பெயருவதால் நீங்கள் முற்றிலும் சோதனை காலத்தை விட்டு வெளி வருகுரீர்கள். முதல் ஓரிரு மாதங்கள் நீங்கள் உங்களது கடந்த கால மோசமான சம்பவங்களில் இருந்து வெளி வந்து அதனை ஜீரணிக்க முயர்ச்சிப்பீர்கள். அதன் பின் நீங்கள் பல புதிய யோசனைகளுடன் உங்கள் தொழிலை வளர்ச்சி அடைய என்ன செய்வதென்று திட்டமிடுவீர்கள். உங்களது புதுமையான யோசனைகள் பலர் கவனத்தை ஈர்க்கும். உங்களுக்கு பல நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இதனால் உங்கள் தொழில் நல்ல வளர்ச்சி அடைய தொடங்கும்.


பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். வெளி நாடுகளில் இருந்தும் உங்களுக்கு பண வரத்து ஏற்படும். உங்களுக்கு புது முதலீட்டாளர்களிடம் இருந்தும் வங்கி கடன் மூல்வமாகவும் பண வரத்து ஏற்படும். புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. புது தொழிலை தொடங்க இது ஏற்ற காலகட்டமாகும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் ஆகியோருக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும்.


Prev Topic

Next Topic