குரு பெயர்ச்சி (2018 - 2019) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

செப்டம்பர் 17, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை நல்ல பலன்கள், அதிக செலவுகள் (70 / 100)


செப்டம்பர் 17, 2019 அன்று சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகம் கவனத்தோடு இருக்க வேண்டும்.உங்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்ல உங்களுக்கு பல வாய்ப்புகள் வரும். எந்த முடிவு எடுக்கும் முன் நீங்கள் நீட கால பலனை சிந்தனையில் வைத்து பின் செயல் பட வேண்டும்.
நீங்கள் புதிதாக யாரிடமாவது நட்பு வைத்து கொண்டாலோ அல்லது புது உறவை ஏற்படுத்தி கொண்டாலோ அது பெரிய பாதிப்பை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்த கூடும். எனினும் நொவம்பர் 2019 முதல் மார்ச் 202௦ வரை நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் புது வேலைக்கான முயற்ச்சிகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் புது வேலை வாய்ப்பு தேடினால் நல்ல சம்பளம் மற்றும் வளர்ச்சி இருக்கும் படியான வேலையை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் தொழில் செய்து கொண்டிருத்தால் முதலீடுகளை குறைத்து கொண்டு நிர்வாக செலவுகளை குறைக்க முயற்ச்சிப்பது நல்லது.


நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டால் அதனை அக்டோபர் 3௦, 2019க்கு முன் செய்வது நல்லது. விசா ஸ்டாம்பிங் செய்ய நினைத்தால் அதனை உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன் பின் முயற்ச்சிப்பது நல்லது. மொத்தத்தில் இந்த காலகட்டம் நீங்கள் முன்பே தொடங்கிய விசயங்களை தொடர்ந்து நிகழ்த்த ஏற்ற காலகட்டமாக உள்ளது. புதிதாக எந்த ஒரு ப்ராஜெக்ட் அல்லது வேறு முயற்ச்சிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.


Prev Topic

Next Topic