![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | முதல் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை நல்ல முன்னேற்றம் (80 / 100)
உங்கள் உடல் நல உபாதைகளில் இருந்து வெளி வருவர்கள். குரு பகவான் உங்கள் ராசியின் பாக்ய ஸ்தானத்திற்கு வருவதால் அதிக நேர்மறை சக்த்திகளை பெறுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சூழலை ஜீரணித்து அதில் இருந்து வெளி வருவீர்கள். இந்த முதல் பாக காலகட்டம் உங்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
உங்கள் குடும்ப பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வதில் அதிகம் நேரம் செலவிடுவீர்கள். உங்கள் குழந்தைகள் அவர்களது தவறுகளை புரிந்து கொண்டு உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்வீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான காலகட்டமாகும். காதலர்கள் மீண்டும் இணைந்து சிறப்பான நேரம் செலவிடுவார்கள். மீன ராசியில் பிறந்த பெண்கள் எதிர் பாரா விதமாக காதல் விண்ணப்பம் பெறக் கூடும். திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்கள் அதற்க்கான பாக்கியம் பெறுவார்கள்.
அனேக புது வேலை வாய்ப்புகளை பெற இது தக்க காலகட்டமாகும். உங்களுடைய புது வேலை வாய்ப்பு உங்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் பதவியை ஏற்படுத்தி கொடுக்கும். உங்கள் மேலாளரிடம் பேசி உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு நீங்கள் முயற்ச்சிக்கலாம். அலுவலகத்தில் எந்த ஒரு அரசியலும் இருக்காது. உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களுக்கு பெரிய நிறுவனம் அல்லது வாடிக்கையாளரிடம் இருந்து நீண்ட கால ப்ராஜெக்ட் கிடைக்கும். உங்கள் தொழிலை அதிக பணம் முதலீடு செய்து விரிவு படுத்த இது ஏற்ற காலகட்டமாகும்.
கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் சட்ட பிரச்சனைகளை ஏதேனும் சந்தித்திருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. தற்போது உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து நீங்கள் அதில் இருந்து வெளி வருவீர்கள். பயணம் மேற்கொள்ள மற்றும் வெளி நாடுகளுக்கு குடி பெயர இது ஏற்ற காலகட்டமாகும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் பெற இது தக்க சமயம் ஆகும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். உங்கள் கடனை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். உங்கள் கிரெடிட் கார்ட் விண்ணப்பம் எளிதில் ஒப்புதல் பெரும்.
பங்கு சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். எனினும் குறுகிய கால முதலீடு மற்றும் ஊக வர்த்தகம் செய்பவர்கள் உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன் பின் முயற்ச்சிப்பது நல்லது. ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் சமுதாயத்தில் நல்ல பெயரும் செல்வாக்கும் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic