![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நான்காம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 4, 2019 வரை சிறப்பான பலன்கள் (85 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் தற்போது ஒரு முடிவுக்கு வரும். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெரும். உங்களுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படாது. உங்கள் உடல் நலம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். மேலும் நல்ல பலம் பெறுவீர்கள். நீங்கள் காதலில் விழுந்தாலோ அல்லது உங்களுக்கு யாரேனும் அவரது காதல் விருப்பத்தை கூறினாலோ அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் தற்போது அந்த பாக்கியம் பெறுவார்கள். நீங்கள் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும். மேலும் அது உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உங்கள் குடும்பம் சமூதாயத்தில் நல்ல பேரும் புகழும் பெரும்.
நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. நல்ல சன்மானம் மற்றும் லாபம் கிடைப்பதை எண்ணி நீங்கள் அதிகம் மகிழ்ச்சி அடைவீர்கள். புது வேலை வாய்ப்பு கிடைத்து பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர இது ஏற்ற காலகட்டமாகும். உங்கள் வேலை சுமையை எளிதில் சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபம் காண்பார்கள். உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் எதிர் காலத்திற்காக நீங்கள் அதிகம் சேமிக்க தொடங்குவீர்கள். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலகட்டமாகும்.
Prev Topic
Next Topic