குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


கடந்த 12 மாதங்கள் நீங்கள் பெரிதும் பாதிக்க பட்டிருப்பீர்கள். சமீப கடந்த காலத்தில் நீங்கள் கடந்து வந்த வலி மிகுந்த காலத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நீங்கள் உடல் நலம், உத்தியோகம், நிதி மற்றும் குடும்ப சூழல் ஆகியவற்றில் அதிகம் பிரச்சனைகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். மேலும் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் நீங்கள் சட்ட பிரச்சனைகளை சந்தித்ததோடு அவமானப் படும் சூழலும் ஏற்பட்டிருந்திருக்கும். இவை அனைத்தும் குரு பகவன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்தாதும் சனி பகவான் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்ததாலும் ஏற்பட்டவை.


தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் அஸ்தம ஸ்தானமான 8ஆம் வீட்டில் இருந்து 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இறக்கங்களை தற்போது முடிவுக்கு கொண்டு வரும். நீங்கள் தற்போது உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கி பயணிக்க தொடங்குவீர்கள். உங்கள் குடும்ப பிரச்சனைகளை சரி செய்து குடும்பத்தினர்களுடன் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். ஏதேனும் சட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் அதில் இருந்து தற்போது நீங்கள் நல்ல தீர்ப்பு கிடைத்து வெளி வருவீர்கள்.
எந்த ஒரு உடல் உபாதைகளும் உங்களுக்கு இருக்காது. நீங்கள் முற்றிலுமாக உங்கள் உடல் ஆரோக்கியத்தை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரத்து அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் ஒரு முக்கியத்தவர் அந்தஸ்த்தை அடைவதோடு செல்வந்தராக ஆகும் வாய்ப்பும் ஏற்படும்.



Prev Topic

Next Topic