குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை மிதமான வளர்ச்சி (60 / 100)


குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீடிற்கு பெயருவதால் சற்று பலம் இழக்கிறார். இதனால் உங்களுக்கு குறைந்தே பலன்களை தருவார். அதனால் நீங்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றத்தில் சில தாமதங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தூக்கம் இல்லாத இரவுகளை நீங்கள் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை நீங்கள் அதிகம் சிந்திப்பதால் ஏற்படக் கூடும். எனினும் நீங்கள் த்யானம், மூச்சு பயிற்சி, கடவுள் வழிபாடு போன்றவை செய்வதால் இத்தகைய சூழலை எளிதில் சமாளிக்கலாம்.
குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் விசயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்க்கான தீர்ப்பு இந்த காலகட்டத்தில் வர வாய்ப்பு உள்ளது. எனினும் அது உங்களுக்கு சாதகமாகவோ அல்லது சாதகம் இல்லாமலோ போகலாம். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்ப்பது நல்லது.


உங்கள் வேலை சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்த்தால் தான் அலுவலக பணிகளை முடிக்க முடியும். உங்கள் பிறந்த ஜாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் வேலையை விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது. எனினும் உங்களுக்கு அடுத்த சில மாதங்களிலேயே புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் புது திட்டங்களை செயல் படுத்துவதை தள்ளிப் போடுவது நல்லது. எந்த ஒரு நிதி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்த கூடும்.



Prev Topic

Next Topic