![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு பகவான் மீண்டும் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். சனி பகவான் வக்கிர கதி அடைந்து கேதுவோடு இணைந்து உங்கள் வளர்ச்சியை பாதிக்க கூடும். நீங்கள் இந்த காலகட்டத்தில் ஒரு கலவையான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் முன்பே தொடங்கிய விசயங்கள் அல்லது ப்ரோஜெக்ட்டை தொடரலாம். எனினும் புதிதாக எந்த ஒரு ப்ராஜெக்ட் அல்லது செயலும் செய்யாமல் இருப்பது நல்லது. உங்கள் உணவில் அதிக கவனம் தேவை. உடற் பயிற்ச்சி செய்வதால் உங்கள் உடல் நலத்தை சீராக வைத்து கொள்ள முடியும்.
உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் அவ்வப் போது வந்து கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைவர், குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிட்டு சுமூகமான உறவு நிலையை வளர்த்து கொள்ள வேண்டும். காதலர்கள் அதிக நேரம் செலவிடமுடியாமல் இருப்பார்கள். திருமணம் நிச்சயிப்பதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. நீங்கள் வெளி நாட்டிற்கு பயணம் செய்ய விரும்பினால் அங்கு செட்டில் ஆக முயற்ச்சிப்பது தற்போது கடினமாக இருக்கும்.
உங்கள் அலுவலகத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்து உங்கள் பணிகளை முடிக்க வேண்டும். நீங்கள் தற்போது புது ப்ராஜெக்ட் ஏதேனும் செய்ய வேண்டிய சூழல் இருந்தால், அது குறித்து சில விசயங்களை நீங்கள் கற்று கொள்ள வேண்டும். உங்கள் முதலாளி மற்றும் மேலாளர் உங்கள் கடின உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இந்த காலகட்டத்தில் புதிதாக வேலை வாய்ப்பிற்கு முயற்ச்சிப்பது நல்லது அல்ல. தொழிலதிபர்கள் அதிக பணம் முதலீடு செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. எனினும் நீங்கள் உங்கள் நிர்வாக செலவுகளை குறைக்க திட்டமிடலாம்.
நீங்கள் பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது, போன்ற விசயங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உங்கள் கிரெடிட் கார்டு கணக்கு அதிகரிக்க கூடும். வீட்டிற்கு விருந்தினர்கள் அதிகம் வருவதால் நீங்கள் அதிகம் செலவு செய்யும் சூழல் ஏற்படலாம். நீண்ட காலம் முதலீடு செய்பவர்கள் பங்கு சந்தை முதலீட்டில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம்.
Prev Topic
Next Topic