குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


கடந்த ஒரு வருடம் ஊக வர்த்தகம் மற்றும் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் மோசமான சூழ்நிலையை சந்தித்திருந்திருப்பார்கள். உங்கள் முதலீடு பெரிதும் பாதிக்கப் பட்டிருந்திருக்கும். நீங்கள் பங்கு சந்தையில் ஒரு பெரிய தொகையை கடந்த ஒரு வருடம் இழந்து இருப்பீர்கள். மேலும் அதிகரித்த கடன் உங்களை பீதி அடைய செய்திருக்கும்.
உங்கள் முதலீட்டால் ஏற்பட்ட இழப்பில் இருந்து வெளி வர நீங்கள் மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் விரைவாக வளர்ச்சியை பெற எண்ணினால் அதற்க்கு உங்களது சாதா பலன் துணையாக இருக்க வேண்டும்.


தங்கம், நிரந்தர இருப்பு தொகை, அரசு பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ஊக வர்த்தஹ்கம் ஜூலை 2019 முதல் உங்களுக்கு லாபம் தரக் கூடும். நீங்கள் புது வீடு வாங்க எண்ணி இருந்தால் அது செப்டம்பர் 2019வாக்கில் நடக்கும். உங்களது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் லாபகரமாக இருக்கும். உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றை முயற்ச்சிக்கலாம்.


Prev Topic

Next Topic