![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2018 மாதங்களில் தந்திருப்பார். தற்போது அவர் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் குறையக் கூடும். உங்கள் நிதி நிலையை சமாளிக்க மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய சவால் நிறைந்த சூழல் ஏற்படும். உங்கள் ப்ரோஜெக்ட்டுக்கு குறைந்த மதிப்பீடு போட்டு நிதி நிலையை மேலும் மோசமாக்க கூடிய சூழல் ஏற்படலாம். எனினும் புதிதாக எந்த ஒரு ஒப்பந்தம் செய்யம் மும் ஆவணங்களை சரியாக படித்து பின் கையெழுத்து போடுவது நல்லது.
உங்களுடன் நீண்ட காலமாக பனி புரிந்த ஊழியர்கள் எதிர் பாராத விதமாக அவர்களது வளர்ச்சிக்காக வேறு உத்தியோகம் பார்க்க நேரிடும். இதனால் உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் கொடுக்க முடியாமல் போகலாம். மேலும் தொழில் குறித்த உங்கள் பயணம் எதிர் பார்த்த பலனை தராது. நீங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை எதிர் பார்த்தால் அது கிடைப்பதில் சவால்கள் நிறைந்திருக்கும். நீங்கள் அதிக வட்டிக்கு வங்கியில் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் நிதி தேவைகளை சமாளிப்பது உங்களுக்கு இது ஒரு கடுமையான காலகட்டமாக இருக்கும்.
புது தொழில் தொடங்குவதோ அல்லது உங்கள் தொழிலை விரிவு படுத்துவதோ தற்போது செய்யாமல் இருப்பது நல்லது. பங்குதாரருடன் சேர்ந்து தொழில் தொடங்குவது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். மேலும் அது சட்ட பிரச்சனைகளையும் உருவாக்க கூடும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள். கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் அதிக சவால்களை சந்திக்க நேரிடும்.
$வழக்கு
கடந்த சில மாதங்கள் நீங்கள் நிலுவையில் இருந்த வழக்குகளில் இருந்து வெளி வந்திருந்தாள் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் உங்களால் அது போன்ற நற் பலன்களை தற்போது நிகழும் குரு பெயர்ச்சி காலத்தில் எதிர் பார்க்க முடியாது. விசயங்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும். வழக்குகளால் பண செலவுகள் அதிகரிக்க கூடும். மேலும் உயர் நீதி மன்றத்திற்கு உங்களது வழக்கை எடுத்த செல்லும் முன் உங்கள் சாதக பலனை பார்ப்பது நல்லது. சனி பகவன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும் ராகு சாதகமற்ற நிலையில் சஞ்சரிபதாலும் நீங்கள் எதிர் பார்த்த பலன்கள் கிடைப்பது சந்தேகமே.
குடும்பத்தினர்களுடன் எந்த ஒரு சட்ட வழக்குகளும் ஏற்படாமல் பார்த்து கொள்வது நல்லது. குழந்தை காவல், விவாகரத்து, சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு அதிகம் வலி மிகுந்த சூழலை ஏற்படுத்தக் கூடும். கந்தர் சஷ்டி கவசம், சுதர்சன மகா மந்திரம் கேட்பது பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க உதவும்.
தக்க வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் அம்ப்ரெல்ல காப்பீடு எடுத்து உங்கள் சொத்துக்களை பாதுகாப்பது நல்லது.
Prev Topic
Next Topic