![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்ப மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | குடும்ப மற்றும் உறவுகள் |
குடும்ப மற்றும் உறவுகள்
குருவின் பலத்தால் குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்த போது உங்கள் குடும்ப சூழல் நன்றாக இருந்திருக்கும். குரு பகவான் தற்போது உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இதனால் நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். மேலும் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தலாம். எனினும் அதிக முயற்சி மற்றும் செலவுகள் இருக்க கூடும். ஜென்ம சனி உங்களுக்கு பல தடைகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் குழந்தைகளிடம் இருந்து உதவி கிடைக்காது. நீங்கள் அதிக பொறுமையோடு அடுத்த ஒரு வருடத்திற்கு இருந்தால் உங்கள் பிரச்சனைகளை கடந்து வந்து விடலாம்.
உங்கள் உறவினர்களுடன் சில கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அவர்கள் உங்களுக்கு தக்க மரியாதை தராததால் இத்தகைய சூழல் ஏற்படலாம். நீங்கள் உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் மன்னிப்பு கேட்டு விட்டு செல்வது நல்லது. நீங்கள் விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் இருந்தால் அது அதிக வலி மிகுந்த சூழலை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். மேலும் ஏப்ரல் 2019 வாக்கில் சில பண இழப்புகளும் உங்களுக்கு ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic