![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை மோசமான பலன்கள் (25 / 100)
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் மற்றும் கேது பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றனர். உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் இருக்கும் முக்கிய கிரகங்களின் தாக்கம் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரக் கூடும். உங்கள் உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்க கூடும். உங்கள் பிறந்த ஜாதக பலன் குறைந்து காணப் பட்டால் நீங்கள் அறுவை சிகிச்சை செய்யும் நிலையம் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் பாதிக்க கூடும். விசயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்க கூடும். நீங்கள் த்யானம், கடவுள் வழிபாடு, ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எந்த ஒரு பெரிய நற்பலனும் கிடைக்காது. உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு முக்கிய மற்றும் நல்ல மாற்றங்களும் இந்த காலகட்டத்தில் ஏற்படாது. உங்கள் மனம் அதிகம் பாதிக்கப் படுவதால் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவி / கணவன் மற்றும் அவரது வீட்டாருடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிக பொறுமையோடு இருந்து இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடுவதை தள்ளிப் போடுவது நல்லது. காதலர்கள் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம். அவர்கள் பிரியும் சூழலும் ஏற்படலாம்.
உங்கள் வேலை மற்றும் சொந்த விசயங்களை சமாளிக்க முடியாமல் போகலாம். அலுவலகத்தில் ஏற்படும் சதியாலும் அரசியலாலும் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் பெரிய அளவு பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் ஜாதக பலன்கள் பலவீனமாக இருந்தால் வங்கி கணக்கு திவால் ஆகும் சூழலும் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்க படலாம். உங்கள் நிதி நிலை பலவீனமாக இருப்பதால் நீங்கள் அவமானப் படும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் உங்கள் பெயர் கெட வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஏதேனும் பங்கு சந்தை அல்லது வேறு விதமான முதலீடு செய்ய நினைத்தால் அது உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி கொடுக்க கூடும். அதனால் இந்த இரண்டாம் பாக காலகட்டத்தில் அதிக கவனத்தோடு செயல் படவேண்டியது அவசியம்.
Prev Topic
Next Topic