குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் அதிக பயணம் செய்வீர்கள். அதிக குறுகிய பயணங்கள் செய்வீர்கள். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரித்து சேமிப்பு குறைய தொடங்கும். எனினும் உங்கள் குடும்ப தேவைகளுக்காக பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் தொலைதூர பயணம் செய்ய நினைத்தால் அல்லது வெளி நாட்டிற்கு பயணம் செய்ய நினைத்தால் உங்களுக்கு நல்ல தாங்கும் வசதி கிடைக்காது. இது உங்கள் உடல் நலத்தை பாதிக்க கூடும். மேலும் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். தொழில் நிமித்தமான பயணம் எதிர் பார்த்த லாபத்தை தராது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிகம் உங்களை பார்க்க உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களை உபசரிக்கவும் வெளியே கூட்டி செல்லவும் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா சம்பந்தமான பிரச்சனைகள் வரக் கூடும். ஏப்ரல் 2019 வாக்கில் நீங்கள் தாய் நாடு திரும்பும் நிலை ஏற்படலாம. உங்களுக்கு குடியேற்றம் மற்றும் கிரீன் கார்டு கிடைப்பதில் சற்று தாமதங்கள் ஏற்படக் கூடும், நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் சாதக பலனை பார்த்து பின் திட்டமிடுவது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic