![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த 12 மாதங்கள் குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருந்து உங்கள் நிதி நிலையில் சில முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருந்திருக்க கூடும். குரு பகவான் ஜென்ம சனியின் தாக்கத்தை சற்று குறைத்து இருந்திருப்பார். தற்போது குரு பகவான் வரும் அக்டோபர் 11, 2018 அன்று உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இது விரைய ஸ்தானம் ஆகும்.
சனி பகவான் ஜென்ம ஸ்தானத்திலும் குரு பகவான் விரைய ஸ்தானத்திலும் மற்றும் ராகு களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது பிரச்சனைகளின் தாக்கத்தை அதிகரிக்கும்.
முக்கிய கிரகங்கள் அனைத்தும் சரியான நிலையில் சஞ்சரிக்காததால் நீங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் சொந்த வாழ்க்கை அதிகம் பாதிக்க கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் வேலை சுமை மற்றும் கடன் உங்கள் உடல் நலத்தை அதிகம் பாதிக்க கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு நல்ல விடயம் என்னவென்றால் உங்களால் சுப காரியங்கள் நிகழ்த்த முடியும். இருப்பினும் இது உங்கள் செலவுகளை அதிகப் படுத்துவதோடு உங்கள் மன அழுத்தத்தையும் அதிகப் படுத்த கூடும். எனினும் நீங்கள் குருவின் பலத்தால் அதனை சிறப்பாக சமாளிப்பீர்கள். மேலும் பயணத்திற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதும் உங்கள் செலவை அதிகப் படுத்த கூடும். ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுப்பது நல்லது. தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது எதிர்களிடம் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தரும்.
Prev Topic
Next Topic