குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை நல்ல நிவாரணம் (50 / 100)


கடந்த காலகட்டத்தை விட இந்த காலகட்டம் சற்று ஆறுதல் தரக் கூடியதாக இருக்கும். குரு மற்றும் சனி பகவானின் மோசமான தாக்கம் சற்று குறையும். உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகள் சற்று விடுப்பு எடுக்கும். மேலும் நீங்கள் கடந்த சமீப காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை ஜீரணிக்கவும் சற்று மூச்சு விடவும் நேரம் கிடைக்கும். இருப்பினும் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கிய நேர்மறை மாற்றமும் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் தற்போது இருக்கும் நிலையில் இருந்து நீங்கள் கீழே போகமாட்டீர்கள். உங்களுக்கு கிடைக்கும் நிவாரணம் உங்கள் பிறந்த ஜாதக பலனை பொறுத்தே உள்ளது.
புதிதாக நட்பு அல்லது வேறு உறவுகளை ஏற்படுத்தி கொள்ள இது ஏற்ற காலகட்டம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களிடம் இருந்து அல்லது மனைவி/ கணவனுடன் இருந்து பிரிந்து இருந்தால் அடுத்தது என்ன செய்வது என்பதை பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான வழி கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். நீங்கள் திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் குழந்தை பேரு பெறுவதற்கான திட்டத்தை தற்ச்சமயம் தள்ளிப் போடுவது நல்லது. ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் பெராது.


சமீப காலத்தில் நீங்கள் உங்கள் வேலையை இழந்திருந்தால் தற்போது தற்காலிகமாக உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனினும் நீங்கள் கிடைக்கும் சம்பளத்திற்கு அந்த வேலையை ஏற்று கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக தற்போதைய உங்களது சூழலை சமாளிக்கவும் உங்கள் வாழ்வாதாரத்திர்க்காகவும் அந்த வேலையை ஏற்று கொள்ள வேண்டும். உங்களுக்கு தற்போது இருக்கும் உத்தியோகத்தில் அதிகம் ஆர்வம் ஏற்படாது. எனினும் நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது தேவைகளை புரிந்து கொண்டு பிரச்சனைகளை சமாளிக்க என்னலாம். தொழிலதிபர்கள் இந்த அக்காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். எனினும் உங்கள் தொழிலை விரிவு படுத்தும் திட்டத்தை, குறிப்பாக அதிக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நிர்வாக செலவுகளை குறைக்க முயற்ச்சிகள் எடுக்கலாம்.
பயணம் செய்ய அதிக வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் உள்ளது. எனினும் குடியேற்றம் குறித்த பலன்கள் பெறுவதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. உங்கள் தற்போதைய நிதி நிலை உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். மேலும் வங்கி கடன் மற்றும் வட்டி விகிதத்தை குறைக்க நீங்கள் நிதி மறுபரிசீலனை செய்ய முயற்ச்சிக்கலாம். எனினும் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீட்டை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic