குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை சுப காரியம் (65 / 100)


சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்கள் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்க கூடும். எனினும் குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிபப்து நீங்கள் சுப காரியங்கள் அதிகம் நடத்த ஆர்வம் காட்டுவதை குறிக்கும். மேலும் அத்தகைய விசயங்களில் நீங்கள் அதிகம் மும்மரமாக இந்த காலகட்டத்தில் இருப்பீர்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பொறுப்புகளால் நீங்கள் தூக்கம் இல்லாமல் அவதிப் படுவீர்கள். நீங்கள் திட்டமிட்டதை விட அதிக மாக சுப காரியங்கள் நிகழ்த்துவதில் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக வட்டிக்கு கடன் வாங்கி சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் பயண செலவுகள் அதிகரிக்க கூடும். நீங்கள் விருந்தினர்கள் வருகையாலும் உறவினர்கள் அதிகம் உங்கள் வீட்டிற்கு வருவதாலும் அதிக செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். காதலர்கள் தங்களது சொந்த பிரச்சனைகளை சமாளிக்க திட்டமிடுவார்கள்.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அதிகம் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ப்ரோஜெக்ட்டை திட்டமிட்டபடி உங்களால் முடிக்க முடியாமல் போகலாம். உங்கள் சொந்த காரணங்களால் அதிகம் விடுப்பு எடுப்பீர்கள். இது உங்கள் வளர்ச்சியை பெரிதும் பாதிக்க கூடும். தொழிலதிபர்கள் தொழிலில் சற்று தாமதத்தை காண நேரிடும். உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன் பின் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுப்பது நல்லது.


அசலை விட நீங்கள் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கட்டுவீர்கள். இதனால் உங்கள் கடன் அதிகரிக்க கூடும். தேவையற்ற விசயங்களுக்கு செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட்டத்தை சோதித்து பார்க்கவும் முதலீடுகள் செய்வதற்கும் இது ஏற்ற காலகட்டம் இல்லை.


Prev Topic

Next Topic