![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
கடந்த சில மாதங்கள் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை சந்திதிருந்திருப்பீர்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2018 மாதங்களில் நல்ல பலன்களை தந்திருப்பார். எனினும் தற்போது அவர் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அத்தகைய பலனை எதிர் பார்க்க முடியாது. சனி பகவான் உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வேலையில் அதிக அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த சூழல் ஏற்படக் கூடும். இது ஏப்ரல் 2019 வாக்கில் உங்கள் நிலையை மோசமாக்க கூடும். உங்கள் அலுவலகத்தில் அரசியல் மற்றும் அவமானப் படக் கூடிய சூழல் ஏற்படலாம். உங்கள் மகா தசை சாதகமாக இல்லை என்றால் நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை இழக்கும் சூழலும் ஏற்படலாம்.
உங்கள் உத்தியோகத்தில் எந்த ஒரு பதவி உயர்வும் அல்லது சம்பள உயர்வும் தற்போது எதிர் பார்க்க முடியாது. உங்கள் மேலாளர் நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். நீங்கள் உங்கள் முதலாளி சொல்லும் வேலையை பிடிக்கவில்லை என்றாலும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் நீங்கள் அலுவலகத்தில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தற்போது நிகழும் குரு பெயர்ச்சி அவ்வளவாக சிறப்பாக இல்லாததால் நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் பயணம் செய்யக் கூடிய வேலை பார்க்கின்றீர்கள் என்றால் அதனை உங்களால் சமாளிக்க முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் வேலையை முடிக்க வாடிக்கையாளரை பல முறை சென்று பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களது பலவீனமான நிலையை பிறர் அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் அவர்கள் வளர்ச்சி அடைய எண்ணுவார்கள். நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா சம்பந்தமான பிரச்சனைகள் வரக் கூடும். அதனால் நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் குறுகிய காலத்திற்கு ஏற்படலாம். குறிப்பாக ஏப்ரல் 2019 வாக்கில். அதனால் நீங்கள் விசா ஸ்டாம்பிங் அல்லது குடியேற்றம் குறித்து பயணம் செய்ய நேர்ந்தால் உங்கள் சாதக பலனை பார்த்து பின் முயற்ச்சிப்பது நல்லது.
Prev Topic
Next Topic