குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை கடுமையான பாதிப்புகள் (25 / 100)


ஜென்ம குருவின் உண்மையான பாதிப்புகளும் ஏழரை சனியின் இறுதி பகுதியின் பாதிப்புகளும் இந்த காலகட்டத்தில் இணைத்து உங்களை பாதிக்க கூடும். மேலும் ராகு மற்றும் கேது இந்த பாகத்தில் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. அதனால் விசயங்கள் முற்றிலும் உங்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும். நீங்கள் அதிக கடவுள் வழிபாடு செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்து உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை அமைதியோடு ஏற்று கொள்வது அவசியம்.
உடல் நல பாதிப்புகளால் அதிகம் அவதிப் படக் கூடும். உங்கள் சொந்த பிரச்சனைகள் உங்கள் மன அமைதியை அதிகம் பாதிக்க கூடும். காதலர்கள் அதிகம் மன வருத்தம் படும் படியான சூழல்களை சந்திக்க நேரிடும். நீங்கள் விரும்புபவரிடம் அதிகம் உடைமை கொண்டவராக இருந்தால் அது உங்களை மனதளவில் அதிகம் பாதித்து பின் உங்கள் மன அலுத்தத்தியும் அதிகப் படுத்த கூடும். உங்கள் ஜாதக பலன்கள் பலவீனமாக இருந்தால் நீங்கள் பிரியும் நிலையம் ஏற்படலாம்.


நீங்கள் அதிக தூக்கம் இல்லாத இரவுகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் தவறுகள் ஏதும் இல்லாமல் உறவினர்கள் மத்தியில் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். பொய்யான அல்லது தவறான வதந்திகள் உங்கள் பெயரை கெடுக்க கூடும்.
நீங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலால் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்கள் உயர் அதிகாரியிடம் இருந்து உங்களுக்கு செயல் திறன் அறிவிப்பு பெறக் கூடும். உங்கள் அலுவலகத்தில் அவமானப் படும் சூழல் ஏற்படுவதால் நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படலாம். எனினும் நீங்கள் உங்கள் குடும்பத்தை காக்க மற்றும் வால்வாதாரத்திர்க்காக உங்கள் வேலையை தக்க வைத்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். தொழிலதிபர்கள் அதிகம் நிதி சுமைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் ஜாதக பலன்கள் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் சூழலும் ஏற்படலாம்.


உங்கள் நிதி நிலை உங்களுக்கு ஒரு சவாலான சூழலை ஏற்படுத்த கூடும். நீங்கள் அசலை விட அதிகம் வட்டி கட்டுவீர்கள். நீங்கள் உங்கள் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்தால் தற்போது அவமானப் படும் சூழல் ஏற்படலாம். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பெரிய அளவு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது உங்கள் சொத்துக்களையும் பாதிக்க கூடும். எனினும் குரு பகவான் 04, 2019 அன்று உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்த உடன் சற்று குறிப்பிட தக்க நிவாரணங்கள் உங்களுக்கு கிடக்கும்.

Prev Topic

Next Topic