குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஆரோக்கியம்


குரு பகவான் உங்களது ஜென்ம ராசிக்கு இடம் மாறுவது ஜென்ம குருவாகும். இது உங்கள் உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான அறிகுறி. மேலும் வரவிருக்கும் ராகு பெயர்ச்சியில் ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வரும் மார்ச் 2019 வாக்கில் இடம் மாறுகிறார். இது உங்கள் உடல் நல பிரச்சனைகளை அதிகப் படுத்தக் கூடும். நீங்கள் சோர்ந்து, மயக்கம், குழப்பமான மன நிலை போன்றவற்றால் அவதிப் படக் கூடும். குரு பகவான் உங்கள் சக்திகளை குறைக்க கூடும். மேலும் சிறு வேலைக்கும் கூட நீங்கள் விரைவாக சோர்ந்து போவீர்கள். உங்கள் உடல் எடை அதிகரிக்க அல்லது குறையக் கூடும்.
உங்கள் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி குறையக் கூடும். கொழுப்பு சத்து அதிக அளவில் உயரக் கூடும். நீங்கள் சரியான உணவு முறையை பின் பற்றினால் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம். நீங்கள் உங்கள் நட்பு வட்டாரத்தின் மீது அதிக கவனம் கொள்ள வேண்டும். நீங்கள் தீய பழக்கத்திற்கு அடிமை ஆகலாம். மேலும் சனி பகவானிடம் இருந்து எந்த ஒரு பலனும் நீங்கள் எதிர் பார்க்க முடியாது.


நீங்கள் அதிகம் புரத சத்து மற்றும் நார் சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பது சற்று முன்னேற்றத்தை தரும். கடவுள் வழிபாடு த்யானம் போன்றவை இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க உதவும், உங்களுக்கு ஏப்ரல் 2019 வாக்கில் தற்காலிகமாக சற்று நிவாரணம் கிடைக்கும்.


Prev Topic

Next Topic