![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | காதல் |
காதல்
காதல் விசயங்கள் தற்போது உங்களுக்கு எதிர் பார்த்த பலன்களை தராது. நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு சில கருத்துவேறுபாடு மற்றும் சண்டை ஏற்படக் கூடும். மேலும் உங்கள் பெற்றோர்களுக்கு தற்போது உங்கள் காதல் விடயத்தை தெரியப் படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால் அது சில எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடக் கூடும். மேலும் உங்கள் காதல் விசயங்களால் வீட்டில் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் திருமணம் செய்து கொள்ள எண்ணினால் அடுத்த ஒரு வருடம் காத்திருந்து உங்கள் பிறந்த சாதகத்தின் பலனோடு செய்வது நல்லது.
நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் தற்போது அவரிடத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் உங்கள் நண்பர்கள் முன் அவமானப் படும் சூழல் ஏற்படக் கூடும். மேலும் அது உங்களது மனதையும் பாதிக்க கூடும். நீங்கள் புதிதாக திருமணம் ஆனா தம்பதியினராக இருந்தால் உங்களுக்குள் அன்யுனியம் குறைந்து காணப் படலாம். மேலும் உங்கள் துணியை புரிந்து கொள்வது உங்களுக்கு கடினமாகவும் இருக்கலாம். நீங்கள் அவரிடத்தில் நம்பிக்கையை அதிகப் படுத்த சற்று பொறுமையோடு செயல் படவேண்டும்.
குழந்தை பேருக்கு திட்டமிட இது ஏற்ற காலகட்டம் இல்லை. மேலும் மருத்துவ முயற்ச்சிகளும் உங்களுக்கு எதிர் பார்த்த பலன்களை தற்போது தராது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு அவசர முடிவும் உங்கள் உறவை பாதித்து தற்காலிகமாக பிரியும் சூழலையும் ஏற்படுத்தக் கூடும். உங்களது மனோ பலத்தை அதிகரித்து இந்த கடுமையான காலகட்டத்தை கடப்பது முக்கியம்.
Prev Topic
Next Topic