![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஒரு வருடமாக குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்திருந்தார். செவ்வாய் மற்றும் கேது இணைந்து ஒரு நீண்ட காலம் உங்களுக்கு உத்தியோகத்தில் பல வெற்றிகளை தந்திருப்பார்கள். உங்கள் வருமானமும் பல மடங்கு அதிகரித்திருந்திருக்கும். மேலும் அதனோடு உங்கள் நிதி தேவைகளும் அதிகரித்திருந்திருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி வேகத்தை குறைந்த்திருந்திருப்பார். மேலும் கடந்த 12 மாதங்கள் நீங்கள் ஒரு கலவையான பலன்களை கண்டிருப்பீர்கள்.
தற்போது குரு பகவான் வரும் அக்டோபர் 11, 2018 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு இடம் மாறுகிறார். இது உங்களுக்கு நல்ல செய்தி அல்ல. ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கும் கேது 2ஆம் வீட்டிற்கும் மார்ச் 2019ல் இடம் மாறுகிறார்கள். இதுவும் உங்களுக்கு நல்ல பலனை தருவது சந்தேகமே. முக்கிய கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் தற்போது அடுத்த 12 மாதங்கள் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
சிறிய வேலைகள் செய்தாலும் நீங்கள் விரைவாக சொர்வடைவீர்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் சில பிரச்சனைகளும் நிதி பிரச்சனைகளும் உங்கள் மன அமைதியை பெரிதும் பாதிக்க கூடும். அடுத்த 12 மாதங்கள் நீங்கள் எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் செய்வதற்கு முன் நன்கு யோசித்து பின் செயல் படுவது நல்லது. பங்கு சந்தை முதலீட்டில் இருந்தும் எந்த ஒரு புது முயற்சி எடுப்பதில் இருந்தும் விலகி இருப்பது நல்லது. விஷ்ணு சஹசர நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பது சற்று ஆறுதலை தரும்.
Prev Topic
Next Topic