![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு மீண்டும் உங்கள் ஜன்ம ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். அதனால் தற்காலிகமாக உங்களுக்கு கிடைத்த நிவாரணம் தற்போது குறையும். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அதனால் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒரு கலவையான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக எந்த ஒரு பிரச்சனையும் தோன்றாது. எனினும் தற்போது இருக்கும் பிரச்சனைகள் தொடரும். அதற்க்கு தற்போது நிவாரணம் கிடைக்காது.
உங்கள் உடல் நலம் சுமாராகவே இருக்கும். தொடரும் குடும்ப பிரச்சனைகள் உங்களை வறுத்த பட வைக்கும். புதிதாக யாரிடமும் நட்போ அல்லது உறவோ வளர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் தற்காலிகமாக குடும்பத்தினரை விட்டோ அல்லது நீங்கள் விரும்புபவரை விட்டோ பிரிய நேர்ந்தால் எந்த ஒரு தெளிவும் இல்லாமல் இருப்பீர்கள். திருமணம் ஆன தம்பதியினர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது. தற்போது உங்களுக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதில் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக சவால்களை சந்திப்பார்கள். தற்போது புது வேலைக்கு முயர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் தற்போது வேலை இல்லாமல் இருந்திருந்தால் தற்காலிகமாக உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த கடுமையான சூழலை நீங்கள் சமாளிப்பீர்கள். அதிக வேலை பார்க்க நீங்கள் ஊக்கம் இல்லாமல் இருப்பீர்கள். எனினும் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் சற்று ஆறுதலாக இருக்கும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். எனினும் உங்கள் தொழிலை அதிக முதலீடு செய்து விரிவு படுத்தும் திட்டத்தை சற்று தள்ளிப் போடுவது நல்லது.
நீண்ட தூர பயணம் செய்ய இந்த காலகட்டம் ஏற்றதாக உள்ளது. எனினும் விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஆகலாம். நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய முயற்ச்சித்தால் அதனை உங்கள் ஜாதக பலன் பார்த்து பின் செயல் படுவது நல்லது. உங்கள் கடன் சுமையை குறைக்க நீங்கள் நிதி மறுபரிசீலனை செய்ய முயற்ச்சிக்கலாம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic