குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகிய இரண்டிற்கும் உங்களுக்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. குரு உங்கள் ராசியின் 1ஆம் வீட்டிலும் சனி பகவான் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களது அதிர்ஷ்ட்டத்தை பாதிக்க கூடும். மேலும் ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு மார்ச் 2019 வாக்கில் முதலீடுகளால் அதிக இழப்புகளை ஏற்படுத்தக் கூடும். தவறான கணிப்பால் நீங்கள் பங்கு சந்தையில் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். அதனால் இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் பங்கு சந்தை முதலீடுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
புது வீடு வாங்குவதோ அல்லது வேறு எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகலையோ நீங்கள் தவிர்ப்பது நல்லது. உங்கள் வீட்டில் குடி இருப்பவர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சொந்த நிலம் இருந்தால் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பிறந்த சாதகப் பலனை பார்க்காமல் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic