குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


ஜென்ம குரு உங்களுக்கு வெளிநாடு போகும் வாய்ப்பை ஏற்படுத்தி கூடவே பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார். மேலும் உங்களுக்கு பயணத்தால் சௌகரியமான தங்கும் வசதி கிடைப்பதில் சந்தேகமே. நீங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருப்பது உங்களுக்கு அதிக தனிமையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் தொழில் நிமித்தமான பயணம் தேவையற்ற பண செலவு மற்றும் நேர விரையத்தை ஏற்படுத்தக் கூடும். முடிந்த வரை வெளி நாட்டு பயணத்தை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள கோவில் போன்ற புண்ணிய தளங்களுக்கு செல்லலாம். எனினும் உங்களுக்கு தாங்கும் விடுத்தி, பயண சீட்டு போன்றவை முன் பதிவு செய்வதில் சலுகைகள் கிடைக்காது. மேலும் அதிகம் அசௌகரியத்தை காண நேரிடும். நீங்கள் சுப காரியங்களில் கலந்து கொள்ள சென்றால் அங்கு அவமானப் படும் சூழல் மற்றும் குடும்ப அரசியல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் உங்கள் தாய் நாடு திரும்பும் சூழலும் ஏற்படக் கூடும். உங்களுக்கு நிரந்தர குடியேற்றம் குறித்த பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் விசா சடம்பிங் செய்ய வெளி நாட்டிற்கு பயணம் செய்ய நேர்ந்தால் உங்களது சாதக பலனை பார்த்து பின் செயல் படுவது நல்லது.



Prev Topic

Next Topic