![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்ப மற்றும் உறவு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | குடும்ப மற்றும் உறவு |
குடும்ப மற்றும் உறவு
உங்கள் குடும்ப உறுப்பினர்களால் நீங்கள் அதிகம் இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் உங்கள் மனைவி / கணவன் அல்லது நெருங்கிய உறவுகளை விட்டு தற்காலிகமாக பிரிந்து இருந்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் நீங்கள் அவமானப் படும் சூழல் ஏற்பட்டிருக்கும். இது உங்கள் மனதை பெரிதும் பாதித்திருந்திருக்கும் கடந்த ஒரு வருடம் குடும்ப அரசியல் அதிகரித்திருந்திருக்கும்.
தற்போது குரு பகவான் உங்களுக்கு சாதகமான இடத்தில் சஞ்சரிக்கின்றார். இதனால் குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. உங்களுக்கு மறைமுக எதிரிகள் இருக்க மாட்டார்கள். உங்கள் மனைவி / கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் வெளிப்படையாக பிரச்சனைகளை பற்றி பேசுவீர்கள். இதனால் உங்களுக்கு இந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வர ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தினர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து உங்களை மகிழ்விப்பார்கள். குடும்பத்தில் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்., இது உங்களுக்கு பெரிய அளவில் நிம்மதியை தரும், மேலும் உங்கள் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிச்சயம், திருமணம், வளைகாப்பு, புது மனை புகுதல் போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.
Prev Topic
Next Topic