![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | ஐந்தாம் பாகம் |
செப்டம்பர் 17, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை நல்ல நேரம் (70 / 100)
சனி பகவான் செப்டம்பர் 17, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த காலகட்டத்தில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் குரு பகவான் சிறப்பான நிலையில் சஞ்சரிப்பதால் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்ப்பர். எனினும் இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுத்த உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். எனினும் நீங்கள் நீண்ட கால அடிப்படையில் எந்த ஒரு முடிவும் எடுக்கும் முன் நன்கு சிந்தித்து பின் செயல் படுவது முக்கியம்.
நவம்பர் 2019 முதல் மார்ச் 2௦2௦ வரை உங்களுக்கு சற்று மோசமான காலகட்டமாக உள்ளது. நீங்கள் புதிதாக யாரிடமாவது நட்பு ஏற்படுத்தி கொண்டாலோ அல்லது நீண்ட கால அடிப்படையில் ஏதேனும் செய்ய முயர்ச்சித்தாலோ அது நீங்கள் எண்ணிய படி நடப்பது சந்தேகமே. இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகம் பாதிக்க பட மாட்டீர்கள். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்ச்சித்தால் நல்ல உத்தியோகத்தில் சேருவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர நிதியில் வளர்ச்சி பெற அல்ல. நீங்கள் தொழிலதிபராக இருந்தால் நவம்பர் 2௦19க்கு பின் ஏற்படும் மோசமான காலகட்டத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள உங்கள் பங்குகளை விற்று பணமாக்கி கொள்வது நல்லது.
நீங்கள் ஏதேனும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் அதனை அக்டோபர் 3௦, 2௦19க்குள் செய்வது நல்லது. நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய வேண்டுமானால் உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து பின் முயற்ச்சிப்பது நல்லது. மொத்தத்தில் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏற்க்கனவே ஏதேனும் பணி தொடங்கி இருந்தால் அதன் பலனை எதிர் பார்க்க இது ஏற்ற காலகட்டம். புதிதாக எந்த ஒரு ப்ரொஜெக்ட்டும் தொடங்க இது ஏற்ற காலகட்டம் இல்லை.
Prev Topic
Next Topic