![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் குரு பகவான் 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையை பெரிதும் கடந்த ஒரு வருடம் பாதித்து இருந்திருப்பார். தற்போது உங்களுக்கு அதிக கடன்கள் ஏற்பட்டிருந்திருக்கும். குரு பகவான் தற்போது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்கள் நிதி பிரச்சனைகள் நல்ல தீர்வு காணும். மேலும் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து உங்கள் மாதாந்தர தவணையை குறைத்து கொள்ள மற்றும் வட்டி விகிதத்தை குறைத்து கொள்ள இது ஏற்ற காலகட்டமாகும். விரைவான தீர்வு மற்றும் முன்னேற்றம் கிடைப்பது உங்கள் பிறந்த சாதக பலனையும் சார்ந்தே இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களால் அடுத்த ஒரு வருடத்திற்கு முழுமையாக கடன்களை அடைக்க முடியாமல் போகலாம். எனினும் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் மருத்துவ மற்று பண செலவுகள் குறையும். உங்கள் வருமானம் உயரும். பண வரத்து வெளி நாட்டில் இருந்து வருவதோடு பல வழிகளில் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கடன்களை நீங்கள் விரைவில் அடைப்பதால் உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ௦%APR புது வங்கி கடன் கிடைக்கும். உங்களுக்கு போதுமான பணம் கிடைக்கும். உங்கள் கடன்கள் குறைவதை எண்ணி நீங்கள் அதிகம் மகிழ்ச்சி கொள்வீர்கள். மேலும் உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளும் கிடைக்கும்.
Prev Topic
Next Topic