குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் வளர்ச்சி (75 / 100)


குரு பகவான் உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். உங்களுக்கு தற்போது அஷ்டமி சனி நடை பெற்றாலும், இந்த காலகட்டத்தில் பிரச்சனைகளின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். நீங்கள் அதிக உடல் நல பிரச்சனைகளால் அவதி பட்டிருந்தால் தற்போது தக்க மருத்துவம் பெற்று நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் பெரும். தேவை பட்டால் நீங்கள் உங்கள் மருத்துவரை மாற்றி மேலும் ஆலோசனை பெற்று தக்க மருத்துவம் பெறலாம்.


உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உங்கள் வாழ்க்கை துணைவர் உறுதுணையாக இருப்பார். நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில் குறிக்கிடும் நபர்களை கண்டறிந்து அவர்களின் சகவாசத்தை துண்டிப்பீர்கள். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தற்போது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதில் இருந்து நீங்கள் நல்ல தீர்ப்போடு வெளி வருவீர்கள். எனினும் அத்தகைய தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவோ சாதகம் இல்லாமலோ இருந்தாலும் கூட நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை காண்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து இந்த காலகட்டத்தில் நிச்சயிக்கும் சூழல் ஏற்படும். திருமணம் ஆனவர்கள் தங்களுக்கிடையே இருந்த பிரச்சனைகளை சரி செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்கள் அப்பாக்கியத்தை பெறுவார்கள்.
உங்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஏதேனும் பிரச்சனையை உங்கள் அலுவகத்தில் ஏற்பட்டால் நீங்கள் புது வேலைக்கு முயற்ச்சிக்கும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். உங்களுக்கு புது ப்ரோஜெக்டுகள் கிடைக்கும். அதனால் நல்ல பண வரத்து அதிகரிக்கும். எனினும் தற்போது அஷ்டம சனி நடை பெறுவதால் உங்கள் தொல்லிலை விரிவு படுத்து எண்ணுவதை தள்ளி போடுவது நல்லது. உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெரும். உங்கள் கடன் பிரச்சனைகள் குறையும்.


சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் அதிகம் கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஜாதக பலனை பார்த்து ஊக வர்த்தகம் செய்வதால் லாபம் உண்டா என்பதை பார்த்து பின் முதலீடு செய்வது நல்லது. ரியல் எஸ்டேட் சம்பந்தமான பரிவர்த்தனைகள் செய்யலாம்.

Prev Topic

Next Topic