குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை பொற்காலம்(80 / 100)


குரு பகவான் இந்த காலகட்டத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். நீங்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பல பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. நீங்கள் எது செய்தாலும் அது உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுக்கும். உங்கள் உடல் நல்ம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். நீங்கள் அதிகம் தோற்றத்தோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருப்பீர்கள். உங்கள் உடல் பலம் பெரும். மேலும் திருமணம் ஆகாதவர்கள் காதலில் விழவோ அல்லது உங்களுக்கு காதல் விண்ணப்பம் வரவோ வாய்ப்புகள் உள்ளது.
திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆனவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல மகிழ்ச்சியோடும் அன்யுனியத்தோடும் இருப்பார்கள். நீங்கள் விரும்பிய உல்லாச அல்லது சுற்றுலா தளத்திற்கு செல்ல இது ஏற்ற காலகட்டமாகும். சுப காரியம் நிகழ்த்துவதில் அதிகம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.


இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு பதவியில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நல்ல சன்மானமும். ஊக்க தொகையும் மற்றும் விருதுகளும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து நல்ல புது வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலை சுமையை நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் காண இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள்.
இந்த காலகட்டத்தில் அஷ்டம சனியால் எந்த பாதிப்பும் இருக்காது. உங்கள் நிதி நிலையில் ஏற்படும் முன்னேற்றம் உங்களை மகிழ்விக்கும். பங்கு சந்தை முதலீடு நல்ல லாபத்தை இந்த குறுகிய காலத்தில் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலகட்டமாகும்.



Prev Topic

Next Topic