![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | ஆரோக்கியம் |
ஆரோக்கியம்
குரு உங்கள் ராசியின் 6ஆம் இடத்தில் சஞ்சரித்து கடந்த 12 மாதங்கள் உங்கள் உடல் நலத்தை பெரிதும் பாதிதிருந்திருக்க கூடும், சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் இருந்து உடல் நல பிரச்சனைகளை அதிகரித்திருக்க கூடும். தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அது விரைவாக குணமடையும். நீண்ட காலமாக இருந்த மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள்.
உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் முன்னேற்றம் காணும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் உடல் எடை வேலை சுமை மற்றும் மன அழுத்தம் காரணங்களால் அதிகரித்திருந்திருக்கும். இப்பொழுது நீங்கள் அதிகம் உடற் பயிற்சி செய்து உங்கள் உடல் எடையை சராசரி அளவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். அடுத்த சில மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
தினமும் காலையில் அதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதும் நல்லது. குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் மனோ பலம் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic