குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

காதல்


குரு பகவான் கடந்த ஒரு வருடம் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரித்தாலும் அஷ்டம சனி நடைபெறுவதாலும் நீங்கள் அதிகம் பதற்றம், வலி, மற்றும் எரிச்சலூட்டக் கூடிய உறவு நிலையை அதிகம் கண்டிருப்பீர்கள். எனினும் தற்போது குரு உங்களுக்கு சாதகமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மனைவி / கணவனுடன் உங்களுக்கு நல்ல உறவுநிலை ஏற்படும். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திர்ந்த தம்பதியினர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். மேலும் இயற்கையாகவும் மருத்துவ சிகிச்சை மூல்வமாகவும் உங்களுக்கு குழந்தை பெரும் வாய்ப்பு உள்ளது.
நீங்கள் விரும்பியவரிடம் இருந்து பிரிந்திருந்தால் தற்போது உங்களுக்கு ஒரு நல்ல புதிய உறவு கிடைக்கும். நீங்கள் காதலில் விழுந்தாலும் அல்லது உங்களுக்கு காதல் விண்ணப்பம் வந்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. மேலும் நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணம் முடியும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் சொந்த வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படுவதை எண்ணி நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் கனவு சுற்றுலா பயணம் செல்ல திட்டமிட இது ஏற்ற காலகட்டமாகும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல மன சூழலை ஏற்படுத்தி கொடுக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic