குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை எதிர் பாராத பின்னடைவு (25 / 100)


கடந்த சில மாதங்கள் உங்களுக்கு ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் நிவாரணம் தற்போது குறைய தொடங்கும். குரு பகவான் உங்கள் அஸ்தம ஸ்தானத்திற்கு தற்காலிகமாக இடம் மாறுகிறார். அஸ்தம சனியின் அதிகப் படியான தாக்கத்தை நீங்கள் இந்த காலகட்டத்தில் காண்பீர்கள். எனினும் இந்த நான்கு வாரத்தை நீங்கள் கடந்து விட்டால் விசயங்கள் சற்று முன்னேற்றம் பெரும். மறைமுக எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் வரக் கூடும். உங்களை யார் எதிர்த்து உங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கும்.
நீங்கள் சுப காரியம் நிகழ்த்த எண்ணினால் அதிகம் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுக்கு எதிரான சதி திட்டங்கள் உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றாலும் நீங்கள் அவமானப் படும் அளவிற்கு சூழல் மாறக் கூடும். உங்கள் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்கள் மன அமைதியை கெடுக்க கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் உங்கள் மனம் அதிகம் பாதிக்க கூடும். மேலும் தூக்கம் இல்லாத பல இரவுகளை நீங்கள் கழிக்க கூடும்.


அலுவகத்த்தில் தொடர்ந்து அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படும். புது மேலாளர் வருகை அல்லது ப்ரோஜெக்ட்டில் ஏற்படும் மாற்றம் உங்கள் வளர்ச்சியை பாதிக்க கூடும். எனினும் இத்தகைய பிரச்சனையை சிறிது காலத்திற்கு மட்டுமே. நீங்கள் இந்த கடுமையான நான்கு வார காலகட்டத்தை கடந்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகள் குறிப்பாக முதலீடு மற்றும் நிதி சம்பந்தமான முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. உங்கள் மனோ பலத்தை அதிக படுத்தி கொண்டு இந்த காலகட்டத்தை கடப்பது அவசியம்.


Prev Topic

Next Topic