குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை மிதமான வளர்ச்சி(50 / 100)


குரு பகவான் மீண்டும் 7ஆம் இடத்திற்கு பயறுவார். இது உங்களுக்கு நல்ல நிவாரணத்தை பெரிய அளவில் கொடுக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். எனினும் இந்த காலகட்டம் எந்த ஒரு புதிய விசயங்கள் தொடங்க ஏற்றதாக இல்லை. நீங்கள் கடங்க 2ஆம் பாகம் காலகட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் இந்த காலகட்டத்தில் அதிக கவனம் தேவை. போதுமான அளவு மருத்துவ காப்பீடு உள்ளதா என்பதை பார்த்து கொள்வது நல்லது.
உங்கள் மனைவி / கணவனுடன் சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் நீங்கள் பொறுமையோடு அத்தகைய சூழலை சமாளிப்பீர்கள். நீங்கள் உங்கள் குழந்தை, பெற்றோர்கள், வாழ்க்கை துணைவர் வீட்டார்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் அதிகம் நேரம் செலவிட்டு அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். காதலர்கள் அதிக நேரம் ஒன்றாக செலவிடுவார்கள். எனினும் உங்களுக்கிடைய காதல் சற்று குறைந்த காணப் படும். நீங்கள் அதிகம் உங்கள் சொந்த பிரச்சனையும் மற்றும் உங்கள் குடும்ப பிரச்சனையையும் அதிகம் பேசுவீர்கள்.


இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் உங்கள் வேலை சுமை அதிகமாக இருக்கும். உங்கள் வேலை சுமை அதிகமாக இருந்தாலும் உங்களது கடுமையான உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் மேலாளர் உங்கள் கடின உழைப்பை மற்றும் உங்கள் செயல்பாட்டை எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்களது ப்ரோஜெக்ட்டை விரைவில் முடிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். மேலும் புதிதாக ஆட்களை வேலைக்கான நியமனம் செயவார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள். பண வரத்து உங்கள் கடனை குறைக்க தேவையான அளவிற்கு இருக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடும். குறிப்பாக ஆடம்பர பொருட்கள் வாங்குவது, அதிகம் பயணம் செய்வது போன்ற விசயங்களால் உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடும். நீங்கள் உங்கள் செலவின் மீது கண் வைப்பது உங்கள் சேமிப்பை காப்பாற்ற உதவும். இது உங்கள் எதிர் கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நீண்ட காலம் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். விசயங்கள் நீங்கள் எதிர் பார்த்தபடி இருக்காது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது தற்போது நல்ல பலனை தராது. நீங்கள் இந்த காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic