![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
நீண்ட கால பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் குரு பகவான் 6ஆம் வீட்டிலும் சனி பகவான் 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்ததால் அனேக இழப்புகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். ஊக வர்த்தகம் அதிகம் இழப்புகளை உங்களுக்கு ஏற்படுத்தி இருந்திருக்கும். குறிப்பாக ஜூலை 2018 முதல் அதிக நட்டங்களை சந்தித்து இருந்திருப்பீர்கள். சமீப காலத்தில் ஏற்பட்ட நிதி இழப்புகள் உங்களை பீதி அடைய செய்திருக்கும். சனி பகவான் தொடர்ந்து நல்ல நிலையில் இல்லை என்றாலும் குரு பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இனி எந்த இழப்புகள் இருக்காது.
எனினும் நீங்கள் உங்கள் முதலீட்டில் வளர்ச்சியை எதிர் பார்த்தால் அதற்க்கு உங்கள் சாதக பலனும் இருக்க வேண்டும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் குரு பகவான் உங்களுக்கு குறிப்பிட தக்க நல்ல பலன்களை தருவார். இல்லை என்றால் அஷ்டம சனியின் நிகழ்வால் தொடர்ந்து இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் உங்கள் முதலீட்டை தங்கம், அரசு பத்திரம், மற்றும் அசையா சொத்துக்கள் மீது போட்டால் சற்று பாதுகாப்பான சூழலை நீங்கள் ஏற்படுத்தலாம். ஊக வர்த்தகம் உங்களுக்கு லாபத்தை தரும், எனினும் அதற்க்கு உங்கள் சாதக பலன் தேவை. புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலகட்டம். எனினும் சரியான சாதக பலன் இல்லாமல் புது நிலம் அல்லது வேறு சொத்துக்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic