குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


தற்போதும் நிகழும் இந்த குரு பெயர்ச்சியால் தொலைதூர பயணம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பயண சீட்டு, தாங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து முன் பதிவு செய்வதில் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்களுக்கு பயணத்தின் பொது சௌகரியமான தாங்கும் வசதி கிடைக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். பயணத்தில் அதிகம் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மேலும் புது கார் வாங்க இது ஏற்ற சமயம்.
நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் கடந்த ஒரு வருடம் விசா மற்றும் குடியேற்றம் குறித்து பல பிரச்சனைகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்கள் விசா விண்ணப்பம் RFE அல்லது 221(g)யிடம் நிலுவையில் இருந்தால் அது குரு பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல முன்னேற்றம் பெற்று உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். வெளி நாட்டிற்கு திரும்பி செல்ல இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நிரந்தரமாக குடியேற்றம் பெற எண்ணினால் அதற்க்கான முயற்ச்சிகளை செய்ய இது ஏற்ற காலகட்டமாகும்.




Prev Topic

Next Topic